சட்டவிரோத தரவுகள் பதிவேற்றம் : அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கொல்கத்தா போலீசார் சம்மன்.!
மேற்கு வங்கம் : தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆசிரியர் வேலைவாய்ப்பு பணமோசடி வழக்கின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை மேற்கொண்டபோது, அலுவலக கணினிகளில் ஒன்றில் சட்டவிரோதமாக வெளிப்புறத்தில் இருந்து ஆதாரங்களை பதிவேற்றம் செய்ததாக குற்றம் சாட்டபட்டுள்ளது. இது தொடர்பாக, தனியார் கார்ப்பரேட் நிறுவன ஊழியர் கொல்கத்தா காவல்துறையில் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகரிகள் மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் நேரில் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.