விநாயகர் சிலை ஊர்வலம்.! கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் கூற உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Madurai High Court - Vinayagar Chathurthi

வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு விநாயகர் சிலை வைத்து வழிப்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கைகள் எழுகின்றன. சட்ட ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதால் சிலை வைத்து வழிபட கோருவோர் முன்னதாக காவல்துறை அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் வரும் செப்டம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரையில் கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு, அதனை தாமிரபரணியில் ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, விநாயகர் சிலை ஊரவலம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்காகி செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்பளித்துள்ளனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்