கலை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மீது கார் மோதி விபத்து.! 3 பேர் பலி, 9 பேர் படுகாயம்..!
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பியவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிழந்துள்ளனர், ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பரான் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரின் ஓட்டுநர் தப்பி ஓடியதாகவும், அவரை தேடும் பணி நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.