பிரியங்கா சோப்ரா உறவினருக்கு முத்தம் கொடுத்த பிரபல இயக்குனர்! வைரலாகும் வீடியோ!
நடிகையும், பிரியங்கா சோப்ராவின் உறவினருமான மன்னாரா சோப்ரா ஜித் திரைப்படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் அறிமுகமானவர். ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் முத்திரை பதிக்க முடியாவிட்டாலும், அதன் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் அப்டியே திரும்பினார். தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்த இவர் தற்போது அங்கு முன்னணி நடிகையாக சிறந்து விளகுகிறார்.
அந்த வகையில், அவர் விரைவில் ஒரு தெலுங்கு படத்தில் டோலிவுட் நடிகர் ராஜ் தருணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘தீர்கபாதர சாமி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்ற போது, அதில் நடந்த மோசமான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
வீடியோவில் ” நடிகை மன்னாரா சோப்ரா தனது இயக்குனருடன் மீடியா கேமரா முன் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார், அப்போது, திடீரென்று இயக்குனர் எஸ் ரவிசங்கர் சவுத்ரி மனாரா கன்னத்தில் முத்தமிட்டார். இயக்குனர் செய்த இந்த செயலை கண்டு மனராவும் சற்று அதிர்ச்சியாகினார்.
#PriyankaChopra’s cousin, actress #Mannarachopra gets kissed by director AS Ravikumar in front of the media! ????????♂️#TiragabadaraSaamipic.twitter.com/54w5JHvjIv
— Ajay AJ (@AjayTweets07) August 29, 2023
பிறகு நிறைய கேமராக்கள் சுற்றி இருந்ததால் அப்டியே சிரித்துகொண்டே அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார். இருப்பினும் திடிரென இயக்குனர் முத்தம் கொடுத்ததால் நடிகை மன்னாரா சோப்ரா முகத்தில் சற்று கோபம் வந்தது தெரிந்தது. பிறகு அப்படியே கோபத்தை மறைத்து வைத்துவிட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.
இது தொடர்பான அந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மற்றும் சமூக ஊடகங்களில் இயக்குனரின் இந்த செயலுக்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பலரும் பொது இடத்தில் நடிகையிடம் இப்படி செய்தது மிகவும் தவறான செயல் என கூறி வருகிறார்கள்.