காவேரி விவகாரம்.! 24,000 கனஅடி நீர் வேண்டும்.. 3000 கனஅடி நீர் தான் தருவோம்.. தமிழ்நாடு – கர்நாடகா வாதம்.!

Cauveri River

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு காவேரி மேலாண்மை வாரிய உத்தரவின் படி கொடுக்கப்படவேண்டிய தண்ணீரை முறையாக கர்நாடக மாநில அரசு தராத காரணத்தால், குறிப்பிட்ட அளவின் படி தண்ணீர் திறந்துவிட கோரி தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்ட்டமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

நேற்று காவேரி ஒழுங்கற்று குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டனர். இந்த ஒழுங்காற்று கூட்டத்தில் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த ஒழுங்காற்று கூட்டத்தில் தமிழகத்திற்கு 5000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவேரி மேலாண்மை வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் காவேரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில், காவேரியில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 4 மாதங்களில் மட்டும் 45 டிஎம்சி அளவில் தண்ணீர் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் காவேரி நீரை நம்பி குருவை சாகுபடி உள்ளது. உரிய நேரத்தில் உரிய அளவில் தண்ணீர் திறந்துவிடாவிட்டால் சாகுபடி பாதிக்கப்படும் என பல்வேறு கோரிக்கைகளை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வைத்து வருகின்றனர்.

மேலும், காவேரி ஒழுங்காற்றுகுழு பரிந்துரை செய்த 5000 கனஅடி நீர் என்பது போதாது. வினாடிக்கு 24,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக தரப்பில், இந்தவருடம் போதிய மழையில்லாத காரணத்தால் 3000 கனஅடி நீர் தான் திறந்துவிட முடியும் என்றும். அதுவும் மழையின் அளவை பொறுத்தே திறந்துவிட முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் காவேரி மேலாண்மை வாரியத்தில் கடுமையான வாதங்கள் இரு மாநிலங்கள் மத்தியிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், காவேரி மேலாண்மை வாரியம் சார்பாக ஒரு குழு தமிழகம்செப்டம்பர் மாதம் வந்து குருவை சாகுபடி செய்த நிலங்களை ஆய்வு செய்து பாதிப்புகளை கணக்கிட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்