ரஜினி அப்பாவுக்கு ரொம்ப நன்றி! ஜெயிலர் மகன் வசந்த் ரவி எமோஷனல்!

rajini

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் வசந்த்ரவி, தமன்னா, விநாயகம், ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.  3 வாரங்கள் ஆகியும் படம் நல்ல வரவேற்பை பெற்று படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையில், படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த வசந்த் ரவி ரஜினிக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” விலைமதிப்பற்ற நினைவுகளை பரிசளித்த ரஜினி அப்பாவுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளை நான் இந்த தருணத்தில் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.  படப்பிடிப்பில் அவருடன் கழித்த ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் அழியாத நினைவாக நெஞ்சில் இருக்கும்.

ஜெயிலர் படப்பிடிப்பு ரஜினி சார் என்னிடம் அவர் சொன்ன விஷயங்கள் என் நடிப்புத் திறனை மட்டுமன்றி, வாழ்க்கை பற்றிய புரிதலை கொடுத்துள்ளது. அந்த தருணங்களை நான் என்றுமே மறக்கவே மாட்டேன்.  இது என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம்” என மிகவும் உருக்கமாக நடிகர் வசந்த் ரவி பதிவிட்டுள்ளார்.

மேலும், வசந்த் ரவி ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். அவர் நடித்த காட்சிகள் குறைவாக இருந்தாலும் கூட தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருப்பார். படத்தில் மற்ற கதாபாத்திரங்களை போலவே, அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்