சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!
சென்னையின் மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி, பிராட்வே, தேனாம்பேட்டை, கிண்டி, பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை பெய்து வருகிறது.
மேலும், சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழை காலை 8 மணி வரை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தி.மலை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.