ஓணம் பண்டிகை: இந்த மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை!
ஓணம் பண்டிகையை தென்தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இந்நாளில் கேரளாவில் மட்டும் இந்த சிறப்பு நாளை கொண்டாட படுவதில்லை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி என மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 29ம் தேதி) அரசு ஆணைப்படி உள்ளுர் விடுமுறை அளித்து அதற்கு ஈடாக செப்டம்பர் 2ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 29ம் தேதி) அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அதற்கு ஈடாக செப்டம்பர் 2ம் தேதி பணி நாளாக ஆக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து அதற்கு ஈடாக செப்டம்பர் 16-ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார்.
திருப்பூரில் இன்று (ஆகஸ்ட்29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து இதனை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 9ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட்29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.