நகைசுவை நடிகர் வடிவேலுவின் தம்பி மறைவு..! முதல்வர் இரங்கல்..!
நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீசன் கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மதுரை ஐரவாதநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது (55) . இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், ‘திரைக்கலைஞர் வடிவேலு அவர்களின் தம்பியான திரு. ஜெகதீஸ்வரன் (52) அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் திரு. வடிவேலு அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/CuDpHtbGk2
— TN DIPR (@TNDIPRNEWS) August 28, 2023