நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க 3 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு.! முதல்வர் அறிவிப்பு .!
அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் இருந்தே தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை கோட்பாடு தான் புழக்கத்தில் உள்ளது. தாய்மொழியான தமிழ் மற்றும் அலுவலக மொழியாக ஆங்கிலம் ஆகியவை புழக்கத்தில் உள்ளன.
இதில் நீதிமன்ற தீர்ப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் கூறப்படுகின்றன. இதனை தமிழுக்கு மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது, முதற்கட்டமாக உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 3 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த தொகையானது தேவைக்கேற்ப அதிகப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.