நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகை – முதலமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தபச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய ஆதார விலை, மாநில அரசின் ஊக்கத்தொகையை செப்.1 முதல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இதில், சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்க செய்துள்ளது. அதன்படி, சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310 எனவும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விசாயிகளுக்கு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு காரீப் 2023-2024 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2:183 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.203 எனவும் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் ஊக்கப்படுத்தும் வகையிலும், 2023-24 கொள்முதல் பருவத்திற்கு நெல்லுக்கான குறைந்தபச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையும் சேர்த்து வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடுஅரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் #CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan@MRKPanneer pic.twitter.com/lmFv9Qwom5
— TN DIPR (@TNDIPRNEWS) August 28, 2023