அஜித் கிட்ட ஒழுக்கம் இருக்கு! ஆனால் விஜய்கிட்ட? கிழித்தெறிந்த பிரபல இயக்குனர்!

ajith kumar and vijay

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் விஜய் நடித்த விதம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், தப்பு தப்பாக நடித்திருந்ததாகவும்,கடுமையாக விமர்சித்து பிரபல இயக்குனரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சமீபத்தில் நான் வாரிசு திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தில் சரத்குமாரை தவிர வேறு யாரும் நன்றாக நடிக்கவில்லை.

சரத்குமார் மட்டும் தான் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல அழகாக நடித்திருந்தார். விஜய் தப்பு தப்பாக நடித்திருந்தார். ஒரு அப்பா முன்னாடி இப்படி தான் ஆணவம் செய்து காமிப்பதா? நான் பெரிசா நினைக்கும் சொத்தே உள்ளே இருக்கும்போது இதெல்லாம் எதுக்குங்க என்று சொன்ன படம் சூரியவம்சம். ஒரு அப்பா முன்னாடி அவ்வளவு நக்கலா கிண்டலாக செய்வது நியாமான விஷயமா? உங்களுடைய அப்பா முன்னாடி பண்ணுங்க அது உங்களுடைய தனிப்பட்ட விஷயம்.

ஆனால், அதனை திரையில் நடித்து காட்டி மற்ற பசங்க கிட்ட காமித்து அவர்கள் அவர்களுடைய மனதிலும் அப்படி நடந்துகொள்ள நீங்கள் தூண்டுனா நீங்க கொடூரமான ஆளு நான் அப்படி தான் சொல்வேன். மற்ற பசங்கள் எல்லாம் அவர்களுடைய அப்பா முன்னாடி டான்ஸ் ஆடி அப்படியெல்லாம் பண்ணி கட்டலாமா? இது தப்பு இல்ல? ஒரு தந்தையை மதிக்க கற்றுக்கொடுக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

உங்களுடைய அப்பாவை வேண்டுமானால் நீங்கள் மதிக்காமல் போகலாம் ஆனால், ரசிகர்களுக்கு நீங்கள் அதனை சொல்லிக்கொடுக்க கூடாது. எவ்வளவு நல்ல விஷயங்களை கற்று கொடுக்கிறது சினிமா நல்லதோ கெட்டதோ ஒரு விஷயம் செய்தால் அதனை நல்ல கருத்தாக தான் புகுத்த வேண்டும். அது விஜய்யாக இருந்தாலும் சரி, அஜித்தாக இருந்தாலும் சரி.

நீங்கள் அஜித்தை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் விஜய்யை போல அப்படி நடிக்க சொல்லுங்கள் பார்ப்போம். அஜித் அப்படி நடிக்கவே மாட்டார், 1000 இருந்தாலும் அவர் நடிப்புக்கென்று ஒரு விஷயம் வைத்து இருக்கிறார். அஜித் கிட்ட ஒரு மாதிரியான ஒழுக்கம் இருக்கிறது ” என ராஜகுமாரன் கூறியுள்ளார். விஜய்யை இவர் விமர்சித்து பேசியுள்ளது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், நீ வருவாய் என உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்