இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ்..! இனிமே இட்லிக்கு சட்னி இப்படி செய்து பாருங்க…!
நம்மில் பெரும்பாலானோர் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசை போன்ற உணவுகளை தான் பெரும்பாலும் செய்வதுண்டு. இந்த உணவுகளுக்காக நாம் சட்னி செய்வதுண்டு. அந்த சட்னி தான் நாம் செய்யும் உணவுக்கே சுவை சேர்க்க கூடிய ஒன்று என சொல்லலாம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஹோட்டலில் செய்வது போல அசத்தலான காரச்சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை
பூண்டு – 10 பல்
வரமிளகாய் – 10
காஷ்மீரி சில்லி – 4
பெரிய வெங்காயம் – 2
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
புலி – ஒரு துண்டு
உப்பு – தேவையான அளவு
பொட்டுக்கடலை – 3 ஸ்பூன்
வேர்க்கடலை – 2 ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, 10 பல் பூண்டு, வர மிளகாய் 10, காஷ்மீரி சில்லி 4, பெரிய வெங்காயம் ஒன்று நறுக்கியது, புதினா,கொத்தமல்லி, புளி ஒரு துண்டு , பொட்டுக்கடலை 3 ஸ்பூன், வேர்கடலை, தேவையான அளவு ஆகியவற்றை போட்டு சிறிதளவு எண்ணெயில் தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அதனுள் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அறைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, நறுக்கிய வெங்காயம், வர மிளகாய், கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு வதக்கிய பின்பு அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது கொதிக்க விட்டு இறக்கிவிட வேண்டும். இந்த சட்னியை இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.