#BREAKING: நிலவை தொடர்ந்து சூரியன்! செப்டம்பர் 2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1!

Aditya-L1 Mission

சூரியனை ஆய்வு செய்தவற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி-57 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட உள்ளது ஆதித்யா எல்-1 விண்கலம்.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட உள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும், ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனுமதி பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஜூலை 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. கிட்டத்தட்ட 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது. நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடாகவும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்று பெருமையை பெற்றது இந்தியா.

விக்ரம் லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டரில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது 14 நாட்கள் ஆயுட்காலத்தின்படி, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ களமிறங்கியுள்ளது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்தவற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.  இந்த திட்டம் வெற்றி அடைந்தால் விண்கலம் மூலம் சூரிய புயல்கள்,  சூரியனில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்துதகவல்களை பெற முடியும். ஆதித்யா விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் கடந்த 2020-ம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்