#BREAKING: இயக்குநராக களமிறங்குகிறார் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.!
லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார் என்பதை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த பதிவில், “ஜேசன் சஞ்சய்யை இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் பெருமைப்படுகிறோம். அவர் வெற்றியும் மனநிறைவும் நிரம்பிய வாழ்க்கைப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறோம்!” என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.