செப்.19 முதல் ஜியோவின் ஏர் ஃபைபர் சேவைத் தொடங்கப்படும்..! முகேஷ் அம்பானி அறிவிப்பு.!
கடந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி நெட்வொர்க்கை வெளியிடத் தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ, தனது ஏர் ஃபைபர் சேவையை செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கவுள்ளது.
இந்த அறிவிப்பானது இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் 46-வது பொதுக்குழு கூட்டத்தின்போது, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த கேபிளின் உதவி இல்லாமல் காற்றிலேயே அதிவேக இணைய சேவையை இந்தியா முழுவதும் வழங்கவுள்ளது.