ஜெயலலிதா சொத்து பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!
சொத்து குவிப்பு வழக்கில் ஏலம் விட வேண்டிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒப்படைத்தனர்.
ஜெயலலிதாவின் ஆயிரக்கணக்கான சேலைகள், காலணிகள், கை கடிகாரங்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்து என்றும் சட்டவிரோத சொத்து பட்டியலில் சேலைகள், காலணிகள் இல்லாததால் அவற்றை ஏலம் விட உத்தரவிட முடியாது என ஆர்.டி.ஐ அலுவலர் நரசிம்ம மூர்த்திக்கு நீதிமன்றம் பதில் அளித்துள்ளது. மேலும், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் வங்கி கணக்கில் உள்ள பணம் பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.