இது முழு நாட்டிற்கும் கிடைத்த பெரிய சாதனை..! தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் தந்தை நெகிழ்ச்சி.!
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதனால் 40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
நீரஜ் சோப்ராவின் தந்தை சதீஷ் குமார் கூறுகையில், “இது முழு நாட்டிற்கும் கிடைத்த பெரிய சாதனை. தற்போது முழு நாட்டிற்கும் மகனாகி விட்டார். தேசத்துக்காக செயல்படுகிறார்” என்று கூறியுள்ளார்.