உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராக்கு நீதா அம்பானி வாழ்த்து.!

neeraj chopra

புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் 2023ல் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றதற்காக, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றதற்காக நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உலக தடகள அரங்கில் மூவர்ணக் கொடிகள் உயர உயர இந்தியாவிற்கு இது ஒரு முக்கியமான நாள்.”

“டிபி மனு, பருல் சௌத்ரி, ஜெஸ்வின் ஆல்ட்ரின், எங்கள் ஆடவர் ரிலே டீம் மற்றும் எங்களின் சொந்த ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தடகள வீரர் கிஷோர் ஜெனா ஆகியோருக்கும் உலக அரங்கில் இந்தியாவைப் பெருமைப்படுத்துவதில் அவர்களின் சிறப்பான செயல்பாடுகளுக்காக வாழ்த்துகள்.”

“ரிலையன்ஸ் அறக்கட்டளையில் உள்ள நாங்கள், இந்திய தடகள கூட்டமைப்புடன் இணைந்து, அடிமட்டத்திலிருந்து பெருமையை நோக்கிய இந்திய விளையாட்டு வீரர்களின் பயணத்தில் எங்கள் பங்களிப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்!” என்று நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்