திமுக தலைவராகி 5 ஆண்டு நிறைவு – முதலமைச்சருக்கு வாழ்த்து!

mk stalin dmk

கடந்த 1949 செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டது. இவரது மறைவுக்கு பிறகு 1969 முதல் திமுகவின் தலைவராக கருணாநிதி அவர்கள் செயல்பட்டு வந்தார். பின்னர், கருணாநிதியின் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக அவருடைய மகன் தற்போதைய முதலமைச்சர் முக ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக 2017ம் நியமிக்கப்பட்டார்.

அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டார். இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி திமுக தலைவராக இருந்த முன்ன முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பிறகு ஆகஸ்ட் 28ம் தேதி திமுகவின் செயல் தலைவராக இருந்த முக ஸ்டாலின், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், திமுகவின் தலைவராக செயல்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இதனிடையே, திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என தொடர் வெற்றியை பதிவு செய்து வருகிறது திமுக. இந்த சமயத்தில், திமுக தலைவராக முக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு, 5 ஆண்டு நிறைவு பெற்று, இன்று 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலினுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், திமுக தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது x தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாம் நம் தி.மு.கழகத்தின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் நம்மையெல்லாம் வழிநடத்தவுள்ளார்கள்.

அரை நூற்றாண்டு காலம் இயக்கத்தை கட்டிக்காத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழி நின்று கழகத்தின் கொள்கையாலும், ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்களாலும் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டி வருகிறார் நம் கழகத்தலைவர் அவர்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தல் – 2021 சட்டமன்றத் தேர்தல் – உள்ளாட்சித் தேர்தல் என களம் கண்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடிய கழகத் தலைவரின் வழிகாட்டுதலோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு விடியலை ஏற்படுத்த அயராது உழைப்போம் என்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்