திருப்பதி மலை பாதையில் சிக்கியது 4வது சிறுத்தை!
திருப்பதி மலைகோயிலுக்கு செல்லும் நடைபாதையில் சுற்றித் திரிந்த 4வது சிறுத்தை பிடிப்பட்டது. சமீபத்தில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மலைப்பாதையில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வந்தனர்.
இந்நிலையில், ஆபரேஷன் சிறுத்தை என்ற பெயரில், வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. வனத்துறையினர் அமைத்த கூண்டுகளில் இதுவரை 3 சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், இன்று 4-வது சிறுத்தை சிக்கியது.