தேசிய நல்லாசிரியர் விருது.! தேர்வாகிய இரண்டு ஆசியர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து.!
தேசிய நல்லாசிரியர் விருது என்பது ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தேசிய நல்லாசிரியர் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், “மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும், உங்கள் அசாதாரண முயற்சிகள் மற்றும் கல்வித் துறையில் பங்களிப்புகளுக்காக ஆசிரியர்களுக்கான தேசிய விருதை-2023 வென்றதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.