தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin

ஆண்டு தோறும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த விருதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அதில் கூறியிருப்பதாவது ” தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!

கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்” என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த தினத்தில் விருதுகள் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்