மடகாஸ்கரில் சோகம்! நெரிசலில் சிக்கி 13 பேர் பலி..103 பேர் காயம்!

Madagascar Stadium death

மடகாஸ்கர் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள பரியா மைதானத்தில் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சுமார் 50,000 பார்வையாளர்கள் கூடியிருந்த பரியா மைதானத்தின் நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விழாவின் போது தொடக்க விழாவில் கலந்து கொண்ட மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்தார். பிறகு திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதத்தால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசலின்போது தொலைந்து போன பொருட்களில் குவிந்திருந்த மக்கள் தங்கள் காலணிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள்.

இந்த சோகமான சம்பவத்தில் “இதுவரை 7 குழந்தைகள் உட்பட  13 பேர் உயிரிழந்ததாகவும் 107 பேர் காயமடைந்துள்ளனர்” எனவும் எதிர்க்கட்சி எம்பி ஹனித்ரா ரசாபிமானன்சோவா உள்ளூர் வானொலி நிலையத்தில் தெரிவித்தார். காயம் அடைந்த அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மேலும், கிட்டத்தட்ட சுமார் 28 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவின் மிகப்பெரிய பரியா ஸ்டேடியம் கடந்த 2019-ஆம் ஆண்டு  இதேபோன்ற ஒரு பேரழிவை சந்தித்தது. நாட்டின் தேசிய விடுமுறையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியின் போது குறைந்தது 16 பேர் உயிரிழந்தார்கள் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்