ரயில் தீவிபத்து குறித்து நாளை விசாரணை.. பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
மதுரை ரயில் நிலையம் அருகே இன்று காலை ஏற்பட்ட சுற்றுலா ரயில் தீவிபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி நாளை (ஆக.27) விசாரணை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு விசாரணை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், மதுரை அருகே ரயிலில் தீ விபத்து தொடர்பாக பொதுமக்கள் விரும்பினால் நேரில் வந்து தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் நாளை காலை நடைபெறும் விசாரணையில் தகவல் தெரிவிக்கலாம். தீ விபத்து தொடர்பான ஆவணங்கள், வீடியோ காட்சிகள் ஏதும் இருந்தாலும் நேரில் வந்து தரலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.