சிறு சிறு வழக்குகள்.. சிறை அதலாத் மூலம் புழல் சிறை விசாரணை கைதிகள் விடுதலை.!
சிறை அதலாத் எனும் நீதிமன்ற விதிப்படி, குற்றவழக்குகளில் ஈடுபட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, விசாரணை கைதியாக குற்றத்திற்கான தண்டனை காலம் போல, நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தால், அவர்களை நன்னடத்தை அடிபடையில், விசாரணை காலத்தை தண்டனை காலமாக கருதி விடுதலை செய்வார்கள்.
அப்படி தான் தற்போது, சென்னை புழல் மத்திய சிறையில் வெளியில் செல்ல முடியாமல், பிணையில் இருக்கும் சிறு வழக்குகளில் ஈடுபட்ட சிறைவாசிகளை, ’சிறை அதாலத்’ விதிப்படி, சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், சிறை கைதிகளுடன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேசுகையில், உங்களை குற்றவாளிகள் என சுட்டிக்காட்ட விரும்பவில்லை. இனிமேல் எந்த தவறும் செய்யாமல் திருந்தி வாழ வேண்டும். இன்னொரு தவறு எந்த ஒரு முறையும் செய்யாதீர்கள்.
இங்குள்ள பலருக்கு திருமணம் ஆகியுள்ளது. அவர்கள் குழந்தைகள் அப்பா எங்கே என உங்கள் வீட்டாரிடம் கேட்கும் போது, அவர்கள் உங்கள் அப்பா சிறையில் உள்ளார் என்றால் அது அந்த குழந்தைக்கு மனது கஷ்டமாக அமைந்துவிடும். இனி இன்னொரு தவறு நீங்கள் செய்துவிட கூடாது. இது எங்கள் வேண்டுகோள் என்பதை விட எங்கள் ஆசை.
நீங்கள் நினைக்கலாம், இங்குள்ள அனைவரும் குற்றம் செய்தவர்கள் இல்லை . அதே போல பெரிய குற்றம் செய்தவர்கள் கூட வெளியில் இருக்கலாம். எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலை. சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் நீங்களும் தவறு செய்து இருப்பீர்கள், யாரேனும் உங்களை தூண்டி விட்டு இருப்பார்கள் . இனி அதற்கு இனங்காமல் , தவறு செய்யாமல் இருங்கள் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கைதிகள் மத்தியில் உரையாற்றினர்.