X-ல் Profile Pic-ஐ மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

stalin

நேற்று முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை, கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில்  உணவு பரிமாறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ மாணவியருடன் கலந்துரையாடியபடி  உணவருந்தினார்.

 தமிழ்நாட்டில் உள்ள 31,008 தொடக்க பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.  இதன்மூலம் 15.75 லட்சம் மாணவர்கள் பயனடைவர்கள். இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் படித்த பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைப்பதில் கலைஞரின் மகனாக பெருமை அடைகிறேன். காலை உணவு திட்டத்தால் என் மனம் நிறைந்து மகிழ்கிறது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், X-ல் தனது Profile Pic-ஐ மாற்றி உள்ளார். அந்த புகைப்படத்தில், திருக்குவளை பள்ளியில் மாணவியுடன் கலந்துரையாடியபடி உணவருந்தியவாறு மூத்தவர் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்