பெருங்கடல் தீவில் விளையாட்டை பார்க்க சென்ற கூட்ட நெரிசலில் 12 பேர் பலி, 80 பேர் காயம்!
இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்காக மடகாஸ்கர் தீவின் தேசிய மைதானத்திற்குள் விளையாட்டை பார்க்க நுழைய முயன்ற ரசிகர்களின் கூட்ட நெரிசலில் 12 பேர் பலியாகினர் மற்றும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை, ஆனால் 2019 இல் மகாமசினா மைதானத்தில் இதேபோன்ற சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுகள் 1977 இல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) தொடங்கப்ட்டது. இதில், மொரிஷியஸ், சீஷெல்ஸ், கொமொரோஸ், மடகாஸ்கர், மயோட், ரீயூனியன் மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.