#Chandrayaan-3: லேண்டரில் இருந்து 8 மீட்டர் பயணித்த ரோவர்! இஸ்ரோவின் புதிய அப்டேட்…
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கிவிட்டது.
இந்நிலையில், லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் ஒரு நிலவு நாள் ஆயுள்காலத்தில் பலகட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்கிறது.
இன்று காலை லெண்டரில் இருந்து ரோவர் வெளியே வரும் அற்புதமான காட்சியை வெளியிட்ட நிலையில், தற்போது திட்டமிடப்பட்டபடி, ரோவர் இயக்கங்களும் சரிபார்க்கப்பட்டன. ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரோவர் பேலோடுகளான LIBS மற்றும் APXS ஆகியவை இயக்கப்பட்டுள்ளன. உந்துவிசை பகுதி, லேண்டர் தொகுதி மற்றும் ரோவரில் உள்ள அனைத்து பேலோடுகளும் பெயரளவில் செயல்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
All planned Rover movements have been verified. The Rover has successfully traversed a distance of about 8 meters.
Rover payloads LIBS and APXS are turned ON.
All payloads on the propulsion module, lander module, and rover are performing nominally.…
— ISRO (@isro) August 25, 2023