புரட்சி தமிழன் சத்யராஜ் தான்.. ஐயா, எடப்பாடி பழனிச்சாமி.? நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விமர்சனம்.!  

Actor Sathyaraj - NTK Party Leader Seeman - ADMK Chief Secretary Edapadi Palanisamy

திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிகழ்ந்த விழாவில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு பற்றிய கேள்விக்கு, பதில் கூறிய சீமான், மதுரை மாநாடு முடிந்து 4,5 நாள் ஆகிவிட்டது. இதுவரை தமிழகத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆந்த மாநாடு அவர்கள் கட்சிக்குள், கட்சியினருக்கு ஓர் உற்சாகம் கிடைக்கும்

முதலில் கட்சி எம்ஜிஆர் வசம் இருந்தது. அடுத்து ஜெயலலிதா வசம் இருந்தது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ளது. கட்சி எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என அவர்கள் காட்டிக்கொள்கிறர்கள் அவ்வளவுதான் என அதிமுக மதுரை மாநாடு பற்றி கூறினார்.

புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி என அதிமுக தொண்டர்கள் கூறுவதற்கு பதில் கூறிய சீமான், புரட்சி தமிழன் என்றால் எங்களுக்கு எப்போதுமே சத்யராஜ் தான். புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி என அழைத்துக்கொண்டால் அது அவர்கள் விருப்பம். புரட்சி எனும் சொல் அவளோ கேவலப்பட்டு போய் இருக்குது என விமர்சித்தார்.

நாடளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி கேட்கையில், எங்கள் கொள்கை முடிவு தனித்து தான் போட்டியிட வைக்கிறது. எங்கள் கொள்கையோடு யாரேனும் ஒத்துப்போய் எங்கள் கூட்டணிக்கு வந்தால், பிறகு கூட்டணி பற்றி பேசலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்