மாரடைப்பால் உயிரிழந்த மாணவன் – நிவாரண நிதி அறிவித்த முதல்வர்..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது மாரடைப்பால் உயிரிழந்த மாணவன்; இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மாணவனின் குடும்பத்துக்கு ₹3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவன் ரிஷிபாலன் நேற்று (24-08-2023) மயிலாடுதுறை மாவட்டத்தில், மண்டல அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்துகொண்டு, காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
இந்த துயரமான நேரத்தில், மாணவர் ரிஷிபாலனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.’ என தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விளையாட்டு போட்டியின் போது மாரப்படைப்பால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அறிவிப்பு#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mp_saminathan pic.twitter.com/V9dZolaTfC
— TN DIPR (@TNDIPRNEWS) August 25, 2023