மணிப்பூர் பாலியல் வழக்குகள்… அசாம் மாநிலத்திற்கு அதிரடி மாற்றம்.! உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

Manipur riots - Supreme Court of India

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கடந்த மே  மாதம் முதல் துவங்கி இன்னும் அம்மாநில மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் இன்னுமும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மணிப்பூர் வன்முறையில் பெண்களுக்கு பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. விடீயோக்கள் மூலம் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதறவைத்தன. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளை சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில், பாதிப்பு ஏற்பட்ட மணிப்பூர் மாநிலத்திலேயே இந்த வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்றால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகும் என கூற்றுகள் எழுந்த பிறகு, உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், சிபிஐ இந்த வழக்கை மணிப்பூரில் வைத்து விசாரிக்க வேண்டாம் எனவும், அசாம் மாநிலத்தில் இதன் மீதான விசாரணையை மேற்கொள்ளுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ , மணிப்பூர் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மொத்தமாக 21 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்