கடைசி விவசாயிக்கு 2 தேசிய விருதுகள்: நன்றி தெரிவித்து இயக்குனர் கடிதம்.!

Director Manikandan

சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில், சிறந்த தமிழ் திரைப்படமாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்திற்கும் அதில் விவசாயியாக நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் தேசிய விருது என 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று பலரையும் பாராட்ட செய்தது.

இந்நிலையில், கடைசி விவசாயி திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றதை அடுத்து, இயக்குனர் ம.மணிகண்டன் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். தில், கடைசி விவசாயி படத்தில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, கதாபாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டிக்கும், ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், சிறப்பாக நடித்த விஜய் சேதுபதிக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி என தனது நெகிழ்ச்சி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்