#BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், எம்.பி – எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆக.28-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக எம்.பி – எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆக.28-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.