தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு.விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. @iVijayakant அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) August 25, 2023