World Cup Chess: தமிழக வீரர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம்.! கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாழ்த்து..!
உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
இதன்பிறகு நடந்த இறுதிப் போட்டியில் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோதினார். அதில் இறுதிப் போட்டியின் இரண்டு சுற்றுகளும் டிராவில் முடிந்தது. இந்நிலையில், உலக கோப்பை செஸ் தொடரின் வெற்றியாளரைத் தேர்வு செய்வதற்கான “டை பிரேக்கர்” (Tie Breaker) சுற்று இன்று தொடங்கி நடைபெற்றது.
இந்த டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டி விறுவிறுப்பாக சென்ற நிலையில், 47 வது காய் நகர்தலுடன் மேக்னஸ் கார்ல்சன் முதல் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்றார். பிறகு டை பிரேக்கர் சுற்றின் இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கினார். இறுதியில் இந்த இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.
இதனால் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன், 2.5 – 1.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று, 6 வது முறையாக உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த இறுதி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், உலகக்கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், “நம்பமுடியாத போட்டிக்கு வாழ்த்துக்கள் பிரக்ஞானந்தா! உங்கள் கனவுகளைத் துரத்தி, இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
Congratulations on an incredible tournament, @rpragchess!
Keep chasing your dreams and making India proud. ♟️???????? #FIDEWorldCup— Sachin Tendulkar (@sachin_rt) August 24, 2023
அதேபோல, இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், ” பிராக், வழக்கம் போல் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.” என்று கூறியுள்ளார்.
Pragg. ???????????? you made us proud as usual. #praggnanandha @rpragchess
— Ashwin ???????? (@ashwinravi99) August 24, 2023
அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யுஸ்வேந்திர சாஹல்,” உங்கள் தலையை உயர்த்திப் பிடித்துக் கொள்ளுங்கள் பிரக்ஞானந்தா. ஒட்டுமொத்த தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது” என்று கூறியுள்ளார்.
Hold your head high Praggnanandhaa. The whole nation is proud of you ????????????@rpragchess pic.twitter.com/YqUAOiNl6u
— Yuzvendra Chahal (@yuzi_chahal) August 24, 2023
மேலும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதில், “FIDE உலக கோப்பை 2023ல் வயதில் இரண்டாம் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.எதிர்காலம் உன்னுடையது, பிரக்ஞானந்தா!” என்று தெரிவித்துள்ளது.
Runner-up in the #FIDEWorldCup2023 at the age of 18! ????
The future is yours, Praggnanandhaa! ???? pic.twitter.com/dECJibxNij
— KolkataKnightRiders (@KKRiders) August 24, 2023