ஆசிய கோப்பை 2023: அணிகள், அட்டவணை, இடங்கள்! போட்டிகளை எதில் கண்டுகளிக்கலாம்.. முழு விவரம்!

asia cup teams

2023 ஆசியக் கோப்பை 50 ஓவர் சர்வதேச கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்தாண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் முழுமையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த இருந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் செல்லாத பட்சத்தில், போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஆசிய கோப்பை – இரண்டு குரூப்:

இந்தப் போட்டித் தொடரில் 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் ஃபோர் நிலைக்கு முன்னேறும். இந்த கட்டத்தைத் தொடர்ந்து, சூப்பர் ஃபோர் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த சாம்பியன்ஷிப்பில் 2 அணிகள் இரண்டு செட்களாக பிரிக்கப்படும். அதன்படி, குழு A-வில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் உள்ளன, குரூப் B-யில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை அடங்கும்.

ஜெய் ஷா உறுதி:

2023 ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டிக்கான தொடரில் ஒரே குழுவில் இந்தியாவும், பாகிஸ்தானும் இடம் பெற்றுள்ளன என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார். ஆசிய கோப்பை தொடரின் ஹோஸ்டிங்கை பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பாகிஸ்தான் இரண்டு இடங்களில் நான்கு போட்டிகளை நடத்த உள்ளது, மீதமுள்ள ஆட்டங்கள் இலங்கையில் நடைபெறும்.

போட்டிகள் விவரம்:

அதாவது, இந்தத் தொடரை பொறுத்தவரை மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 9 போட்டிகள் இலங்கையிலும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடக்கின்றன. ஆசியக் கோப்பை 2023 தொடர் வரும் 30ம் தேதி பாகிஸ்தானில் உள்ள முல்தானில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான கிக்ஆஃப் போட்டியுடன் தொடங்க உள்ளது. செப்.2-ம் தேதி இலங்கையில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் போட்டியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது இந்தியா.

2023 ஆசிய கோப்பைக்கான அணிகள்:

இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளை தவிர, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா(துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது யாத் கிருஷ்ணா, குல்தீப் கிருஷ்ணா, குல்தீப் கிருஷ்ணா மற்றும் சஞ்சு சாம்சன் (பேக் அப்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேபாள அணி: ரோஹித் பௌடெல் (கேப்டன்), மஹமத் ஆசிப் ஷேக், குஷால் புர்டெல், லலித் ராஜ்பன்ஷி, பீம் ஷர்கி, குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, சந்தீப் லமிச்சனே, கரண் கே.சி, குல்ஷன் குமார் ஜா, ஆரிப் ஷேக், சோம்பால் கமி, பிரதிஷ் ஜி.சி., கிஷோர் மஹதோ , அர்ஜுன் சவுத், ஷியாம் தக்கல் ஆகியோர் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி: அப்துல்லா ஷபீக், ஃபக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, தயாப் தாஹிர், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ் அஷ்ரப், ரவூப், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிடி.

பங்களாதேஷ் அணி: ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், தன்சித் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், ஷேக் மஹேதி, நாசும் அகமது, ஷமிம் ஹொசைன், அஃபிஃப் ஹொசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், எபடோட் ஹொசைன், நைம் ஷேக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடரை எங்கே பார்க்கலாம்?

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள 2023 ஆசிய கோப்பை 50 ஓவர் தொடரை ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா மற்றும் அமேசான் பிரைம் ஆகிய OTT தளத்திலும் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் இந்திய பார்வையாளர்கள் பார்க்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Asia Cup Schedule
[SOURCE:ICC]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்