#BREAKING: இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது!
சினிமா துறையினை இந்திய அரசினால் கௌரவவிக்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கருவறை குறும்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கருவறை’ என்ற Non Features திரைப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.