தென்னாப்பிரிக்கா செய்தித்தாளில் சந்திரயான்-3: இணைந்து படித்த பிரதமர் மோடி – பிரேசில் அதிபர்!
தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரேசில் அதிபருடன் இணைந்து, தென்னாப்பிரிக்காவின் முக்கிய செய்தித்தாள் ஒன்றில், நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய வரலாற்று சிறப்புமிக்க கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி படிக்கும் புகைப்படத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
This morning at the BRICS Summit. pic.twitter.com/14r0ZmiHCx
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 24, 2023
அவர் பகிர்ந்து கொண்ட அந்த புகைப்படத்தில், “இந்தியாவின் மோடி இந்த உலகத்திலிருந்து வெளியேறினார்” என்று தென்னாப்பிரிக்காவின் ‘தி ஸ்டார்’ செய்தித்தாளில் தலைப்புச் செய்தி இடம்பெற்று இருந்தது.
பிரிக்ஸ் மாநாட்டிற்காக பிரதமர் மோடி தற்போது ஜோகன்னஸ்பர்க் சென்றுள்ளார். சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதை காணொலி வாயிலாக அங்கிருந்து பார்த்திருந்தார். வரலாற்று சிறப்புமிக்க தரையிறங்கிய பின்னர் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் மற்றும் சிறப்புரையும் வழங்கினார்.