நிலவில் கொடி நாட்டிய இந்தியா: இபிஎஸ் -ஓபிஎஸ் வாழ்த்து!
கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. மிகவும் சவாலான இந்த பணியை வெற்றிகரமாக சாத்தியமாக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில், தற்பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்னர். இதில், தனது X தள பக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும், மகிழ்ச்சியையும் உணர்கிறேன். விக்ரம் லேண்டரை சீராக தரையிறக்குவதன் மூலம் வேறு எந்த உலக நாடு விண்வெளி மையம் செய்ய முடியாத சாதனையை செய்துள்ளது.
நமது விழுப்புரத்தைச் சேர்ந்த இஸ்ரோ தலைவர் திரு எஸ்.சோமநாத், திட்ட இயக்குநர் திரு.பி.வீரமுத்துவேல் அவர்களுக்கும், குறிப்பாக சந்திராயன் இயக்கத்தின் முன்னோடியான முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு.கே.சிவனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.
Feeling elated & proud for being the first nation to land a spacecraft on the moon’s south pole.
Congratulations to our @isro for making this mission a grand success through smooth landing Vikram Lander Module where no other global space powers could.
Hearty wishes to ISRO… pic.twitter.com/PA44h9Kw5h
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 23, 2023
மேலும், ஓ.பன்னீர்செல்வம் தனது X தள பக்கத்தில், நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் விண்வெளியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. விண்வெளியில் சரித்திரச் சாதனை படைத்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், சந்திராயன்-3 திட்ட இயக்குநர் திரு. P. வீரமுத்துவேல் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். விண்வெளியில் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதன்மூலம் விண்வெளியில் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. விண்வெளியில் சரித்திரச் சாதனை படைத்துள்ள இஸ்ரோ…
— O Panneerselvam (@OfficeOfOPS) August 23, 2023