மிசோரம் பால விபத்து: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!
மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக கட்டப்பட்ட வந்த ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என அறிவத்துள்ளார்.
இது குறித்து தனது X தள பக்கத்தில் பிரதமர் மோடி, மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று குறிப்பித்தோடு நிவாரணம் தொகை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
Pained by the bridge mishap in Mizoram. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon. Rescue operations are underway and all possible assistance is being given to those affected.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the…
— PMO India (@PMOIndia) August 23, 2023