2024ல் மீண்டும் மோடி தான் பிரதமர்.. 40க்கு 40 தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற செய்வோம் – அண்ணாமலை

Annamalai, BJP State president

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமையும் என்று ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை கடந்து நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை மேற்கொண்டு நிறைவு செய்தார்.

அண்ணாமலையின் இரண்டாம் கட்ட பயணம் செப்டம்பர் 3 ஆம் தேதி தென்காசியில் தொடங்கி, 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. என் மண், என் மக்கள் யாத்திரையின் முதற்கட்ட பயணம் நெல்லை சட்டமன்ற தொகுதியுடன் நேற்று நிறைவு பெற்றது. அப்போது, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மக்களின் அளவு கடந்த அன்பை மட்டும் தான் பாஜக எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் மோடி மீது அன்பை வைத்துவிட்டால் அவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறினார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி மீண்டும் மோடி பிரதமராக பொறுப்பேற்பார். தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற செய்வோம். தமிழக மக்கள் பிரதமர் மோடி மீது அன்பை வைத்திவிட்டால், வாக்குகள் அனல் பறக்கும்.  மோடியின் ஆட்சியில்தான் தமிழுக்கு பெருமை கிடைத்துள்ளது. கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சி இந்திய மக்களுக்கான ஆட்சியாக மாறி இருக்கிறது. மத்திய அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது என கூறிய அவர், 2024 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்