ஜார்கண்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
ஜார்கண்ட் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக ஜார்கண்ட் மாநில நிதியமைச்சர் டாக்டர் ராமேஷ்வர் ஓரான், அவரது மகன் ரோஹித் ஓரான், நெக்ஸ்ஜென் உரிமையாளர் வினய் சிங், மதுபான வியாபாரி யோகேந்திர திவாரி ஆகியோருக்கு தொடர்புள்ள இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ஹர்முவில் உள்ள மதுபான வியாபாரி யோகேந்திர திவாரியின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இது தவிர, ராஞ்சி, தியோகர், தும்கா, கொல்கத்தா, தன்பாத் மற்றும் கோடா மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் சுமார் 32 இடங்களில் ரெய்டு நடக்கிறது. சிஆர்பிஎஃப்-ன் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.