மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்!

Tamilnadu fisherman arrested

நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வேதாரண்யம் மீனவர்கள் வைத்தியநாதசுவாமி, ராமராஜன் மற்றும் செல்வராஜ் ஆகியோரை தாக்கி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்ஃபோன், 20 லிட்டர் டீசலை கொள்ளையடித்துச் சென்றனர் இலங்கை கடற்கொள்ளையர்கள். வேதாரண்யம் மீனவர்கள் மீது ஏற்கனவே நேற்று  இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியிருந்த இருந்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வருவதற்கு அரசியல் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்