பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்..!
ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஜிம்பாவே அணியை, தலைசிறந்த அணிகளோடு சரிக்கு சரிமமாக மோதும் பலமிக்க அணியாக மாற்றியவர். பவுலிங், பேட்டிங் என எல்லாவற்றிலும் மிக சிறப்பான பங்களிப்பை அளித்தவர்.
இவர் ம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4933 ரன்கள் அடித்ததுடன், 455 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஹீத்ஸ்ட்ரீக் (49) புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் வீர்ரகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.