மீண்டும் தலைதூக்கும் கொரோனா..! எந்த சூழலையும் தமிழகம் எதிர்கொள்ள தயார்..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் Shifting landscapes/ Innovation in Public Health research கருத்தரங்கில் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் புத்தகம் வெளியிடப்பட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் பேசிய அவர், தற்போது பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது.
எத்தனை புதிய வைரஸ் வந்தாலும் தன்னை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை, இந்த திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேலானோர் பயனடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.