சசிகலா மேல்முறையீட்டு மனு வரும் ஆக.30ம் தேதி விசாரணை.! சென்னை உயர்நீதிமன்றம்.!
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 30 நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் 2017இல் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விளக்கியும் அதிமுக கட்சியில் இருந்தும் நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்பிறகு, அவர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது செல்லாது என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த பொதுக்குழு முடிவையும் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவையும் எதிர்த்து கடந்த ஆண்டு சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், தற்பொழுது சசிகலா தரப்பு முறையீட்டை ஏற்று, இந்த மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 30ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.