காவலர்கள் நலன் காக்க வாட்சப் குழு உருவாக்க வேண்டும் – டிஜிபி சங்கர் ஜிவால்
தமிழ்நாடு காவல்துறை நலனுக்காகவும், காவல்துறை அதிகாரிகள் பயன்பெறும் வகையில் வாட்ஸ் குழு உருவாக்கப்படவுள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் தெரிவித்துள்ளார். Tamilnadu police welfare என்ற பெயரில் உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் டிஜிபி உள்ளிட்ட தலைமை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என கடைசி காவலர்கள் வரை இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அளவில் ஏடிஎஸ்பி தலைமையில் வாட்ஸ்அப் குரூப் அமைக்கப்பட்டு அதில் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இருக்க வேண்டும்.
மற்ற நகரங்களிலும் மற்றும் மாவட்டங்களிலும் ஆய்வாளர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குரூப்பில் கடைசி காவலர்கள் வரை இணைக்கப்பட வேண்டும் என்றும், வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து காவல்துறை நலன் சார்ந்து பதிவிடப்படும் பதிவுகள் மூலமாக உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்க்கு பதிவுகள் அனுப்பப்பட வேண்டும் என்றும், காவலர் நலன் சார்ந்த துறை ரீதியான பதிவுகளை தவிர வேறு எந்த பதிவுகளையும் பதிவிட கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.