நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளில் இருந்து 400-450 மெகாவாட் நிரந்தர ஒதுக்கீடு.! உத்தரகாண்ட் முதல்வர் கோரிக்கை.!
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
அப்போது, மாநிலத்தின் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அடிப்படை சுமையைப் பாதுகாக்கவும், மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றவும் நிலக்கரி அடிப்படையிலான ஆலைகளில் இருந்து 400-450 மெகாவாட் நிரந்தர ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஒதுக்கப்படாத ஒதுக்கீட்டில் இருந்து மாதத்திற்கு, 300 மெகாவாட் மின்சாரம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.