அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய பட படப்பிடிப்பு மங்களகரமாக தொடங்கியது!
இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில் கெம்ப்ரியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படத்திற்கு மங்களகரமான பூஜையுடன் இன்று துவங்கியது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், அர்ஜுன் தாஸின் கதாபாத்திரம் ஒரு குதிரைக் காலணி தயாரிப்பாளராக அமைக்கப்பட்டுள்ளது. பூஜை இன்று தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
படம் சமூக-அரசியல் நிலையைப் பற்றி எடுத்துறைக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார்.